தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி


தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
x

தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது

கரூர்

கரூர் வட்டார வள மையம் சார்பில் கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 1 முதல் 3-ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளியில் பணியாற்றும் 128 தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்றது. இதில், ஆசிரிய கருத்தாளர்களை கொண்டு உடல் நலம், ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி பற்றி ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியினை வட்டாரக்கல்வி அலுவலர் மணிமாலா, மாயனூர் பயிற்சி விரியுரையாளர் பாலசுப்பிரமணியம், முருகபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.


Next Story