மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் பயிற்சி முகாம் உளுந்தூர்பேட்டையில் நாளை நடக்கிறது


மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் பயிற்சி முகாம்    உளுந்தூர்பேட்டையில் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் பயிற்சி முகாம் உளுந்தூர்பேட்டையில் நாளை நடக்கிறது.

கள்ளக்குறிச்சி


இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

500-க்கும் மேற்பட்டவர்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் தொழில் பழகுனர் பயிற்சியின் கீழ் மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் உளுந்தூர்பேட்டை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

முகாமில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தொழில் பழகுநர் பயிற்சிக்கு சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

உதவித்தொகை

இதன் மூலம், என்.சி.வி.டி. மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழிற்பழகுநராக ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சி பெற்று தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.8 ஆயிரத்து 500 முதல் ரூ.10 ஆயிரம் வரை நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் கூடுதல் தகவல்களுக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் மற்றும், தொலைபேசி எண் 04146 294989, 96296-66279 மற்றும் 97916-08373 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story