பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
செய்யாறு நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் செய்யாறு நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், திருவத்திபுரம் நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல், தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் ஆர்.வேல்முருகன், வி.அன்பழகன், வெங்கடேஷ் பாபு, ஏ.என்.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கே.விஸ்வநாதன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக தலைமை கழக பேச்சாளர்கள் செந்தூர் பாலகிருஷ்ணன், கலைமணி பாரதி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர்கள் பேசுகையில், 42 வருடம் கழக பொதுச் செயலாளராக இருந்து கழக பணியாற்றியவர் பேராசிரியர் அன்பழகன். கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் அவர்களின் வழியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். மக்களை நேரடியாக சந்தித்து முதல்-அமைச்சர் ஆனவர் மு.க.ஸ்டாலின். புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார் என்றனர்.
தொடர்ந்து ஜோதி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவில் சான்பாஷா நன்றி கூறினார்.