பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா


பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் பகுதியில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பழைய பஸ்நிலையத்தில் நகர, வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் தி.மு.க. பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலர் ஏ.எஸ் ஜோசப் தலைமை தாங்கினார். நகர செயலர் மகா.இளங்கோ முன்னிலை வகித்தார். இதில் அன்பழகன் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய அவைத் தலைவர் பால்ராஜ், ஒன்றிய துணை செயலர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் காமராஜர் நகர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு ஒன்றிய செயலர் பாலமுருகன் தலைமை தாங்கி அன்பழகன் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி. ஒன்றிய அவைத் தலைவர் ராஜபாண்டி, ஒன்றிய துணை செயலர் திருக்கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, உடன்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பரமன்குறிச்சி, வெள்ளாளன்விளை, தண்டுபத்து, குலசேகரன்பட்டினம், மணப்பாடு ஆகிய பகுதிகளில் உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ தலைமையில் பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடன்குடி கூட்டுறவு சங்க தலைவர் அஸ்ஸாப், அவைத்தலைவர் சேக் முகமது, நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் மகாவிஷ்ணு, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் மனோஜ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story