பதாகைகளை ஏந்தி பேராசிரியர்கள் போராட்டம்


பதாகைகளை ஏந்தி பேராசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 April 2023 12:30 AM IST (Updated: 22 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பதாகைகளை ஏந்தி பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நியமிக்க வேண்டும், பதிவாளர் பதவி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும், புதிய பதிவாளரை நியமினம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் 'வெளியேறு, வெளியேறு தகுதியில்லா பதிவாளரே வெளியேறு', 'பல்கலைக்கழக மேலாண்மைகுழு நிரந்தர பதிவாளரை நியமனம் செய்', 'விதிகளுக்கு உட்பட்டு துணைவேந்தரை நியமனம் செய்', 'விதிகளுக்கு புறம்பாக இருக்கும் பதிவாளரே வெளியேறு' என்ற கோரிக்கைகள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக பெல் மைதானம் வந்தனர். அங்கு பதிவாளருக்கு எதிராக கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ராஜா பிரான்மலை, துணைத்தலைவர் மணிகண்டன், செயலாளர் சண்முகவடிவு, இணைச்செயலாளர் மணிவேல், செயற்குழு உறுப்பினர்கள் சத்யா, ரமேஷ்பாபு, அறிவழகன், டேவிட் ஜெயராஜ், பிராங்கிளின் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story