கடலூர் தனியார் கல்லூரியில் பேராசிரியர்கள் விடிய, விடிய போராட்டம் முதல்வரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு
கடலூர் தனியார் கல்லூரியில் முதல்வரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
கடலூரில் உள்ள தனியார் கல்லூரி முதல்வரை நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் விடிய, விடிய நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு தலைவர் வசந்தி தலைமை தாங்கினார். செயலாளர் லாவண்யா, பொருளாளர் அன்பரசி உள்ளிட்ட பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story