விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும்


விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும்
x

விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும் என்று, பெ.மணியரசன் கூறினார்.

தஞ்சாவூர்

மன்னார்குடி;

விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும் என்று, பெ.மணியரசன் கூறினார்.

கருத்தரங்கம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நேற்று மாலை உழவர் வாழ்வு உயர வேளாண் நிலம் காக்க என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிர்வாகி ராஜசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாகி மணிகண்டன் வரவேற்றார். காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருகிணைப்பாளர் மணியரசன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-அனைத்து நியாய விலைக் கடைகள், குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்கள், சத்துணவு திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்துவதை கைவிட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி படுகையில் தொழில் திட்டங்கள் தொடங்கக்கூடாது.

லாபகரமான விலை

மேலும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரமும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரத்து 500-ம், இதர விளை பொருட்களுக்கு லாபகரமான விலை நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் தமிழ் தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், காவிரி உரிமை மீட்பு குழு பொருளாளர் மணிமொழியன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் செந்தில்வேலன், கலைச்செல்வம், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் நிர்வாகி நிரஞ்சன் நன்றி கூறினார்.


Next Story