பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி


பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

சுதந்திர தினவிழா

75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஓசூர் மாநகராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் தேசிய கொடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், நாகராஜ் மற்றும் நகர் நல அலுவலர் அஜிதா, மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்,

பாகலூர் ஊராட்சி

பாகலூர் ஊராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும் வகையில் பொதுமக்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு தேசிய கொடியை வழங்கினார். இதில், துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சர்வேஷ் ரெட்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 15 வார்டுகளிலும் உள்ள வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் வகையில் பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் அமானுல்லா கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேசிய கொடியை வழங்கினார். மேலும் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தினார். இதில் கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story