நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி


நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி
x

நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நெல்கோட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டது.

நெல்கோட்டை வழங்கும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பழமையான வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருமண கோலத்தில் சிவன் பார்வதி அகத்தியருக்கு காட்சி கொடுத்த இடமாகும். ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று குன்னலூர் கிராமத்தில் 200 ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைந்த நெல்லை அறுவடை செய்து தைப்பூசம் அன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி சாமிக்கு வழங்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதம்

நெல் அறுவடை செய்து அதனை கோட்டையாக கட்டி விவசாயிகள் நேற்று மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்சென்று வேதாரண்யம் கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்பு வேதாரண்யேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கபட்டது. தொடர்ந்து மகர தோரண வாயில் வைக்கப்பட்ட நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டது. பின்னர் நெல்லை அரிசியாக்கி இரவு 2-ம் காலத்தில் சாமிக்கு நெய்வேத்தியம் செய்து படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.


Next Story