தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு ஈருந்தனர். அப்போது, தூத்துக்குடி 2-வது ரெயில்வே கேட் அருகேயும், அம்பேத்கார் நகர் பகுதியிலும் சந்தேகப்படும் நின்று கொண்டு இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த கோட்டை பாண்டியன் மகன் சுரேஷ் (வயது 43) மற்றும் தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்த பார்வதிநாதன் மகன் மாயக்கூத்தன் என்ற பெருமாள் (64) என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
உடனடியாக போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 41 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போன், ரூ.43 ஆயிரத்து 450 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.