மதுவிலக்கு போலீசார் பணியிட மாற்றம்


மதுவிலக்கு போலீசார் பணியிட மாற்றம்
x

மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விருதுநகர்


மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் போலீசாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியிட மாற்றம்

அதன் விவரம் வருமாறு:-

சாத்தூர் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு ஜெயச்சந்திரன், விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், ராஜசேகர் சாத்தூர் டவுனுக்கும், சரவணா பந்தல்குடிக்கும், சதீஷ் பாபு விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், ஜெயபாண்டி விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்திற்கும், போலீசார் மாயாவதி திருத்தங்கல்லுக்கும், செல்வகுமார் சாத்தூர் டவுனுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அம்புரோஸ் அம்மாபட்டிக்கும், அன்பு பரளச்சி போலீஸ் நிலையத்திற்கும், முருகன் சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கும், மீரா தேவி சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் பிரிவிற்கும், மகாலிங்கம் ஆவியூர் போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.

வச்சக்காரப்பட்டி

சாத்தூர் மதுவிலக்கு பிரிவிற்கு கீழ்க்கண்டவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தூர் டவுனில் பணியாற்றும் போலீஸ்ஏட்டு தங்கய்யா, விருதுநகர் மேற்கில் பணியாற்றும் ஒண்டிவீரன், காரியாபட்டியில் பணியாற்றும் முகமது, வச்சக்கார பட்டியில் பணியாற்றும் பாண்டியன், நரிக்குடியில் பணியாற்றும் சேர்மராஜ், சாத்தூர் டவுனில் பணியாற்றும் செந்தில்குமார், ஏழாயிரம் பண்ணையில் பணியாற்றும் செந்தாமரை, விருதுநகர் அனைத்து மகளிர் பிரிவில் பணியாற்றும் மகாலட்சுமி, விருதுநகர் மேற்கில் பணியாற்றும் கோடீஸ்வரி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் பஜாரில் பணியாற்றும் சுந்தரராஜன், விருதுநகர் பாண்டியன் நகரில் பணியாற்றும் முத்துக்குமார், அருப்புக்கோட்டை தாலுகாவில் பணியாற்றும் தனவேல், அருப்புக்கோட்டை தாலுகாவில் பணியாற்றும் அங்கமுத்து, விருதுநகர் பஜாரில் பணியாற்றும் கணேசன், சாத்தூர் அனைத்து மகளிர்பிரிவில் பணியாற்றும் செல்வ லட்சுமி, சாத்தூர் தாலுகாவில் பணியாற்றும் சுந்தர், இருக்கன்குடியில் பணியாற்றும் மகேஸ்வரன் ஆகியோர் சாத்தூர் மதுவிலக்கு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டுகள் மஞ்சுளா ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ்பிரிவிற்கும், பூபால் ராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கும், சுந்தர மகாலிங்கம் சேத்தூர் போலீஸ் நிலையத்திற்கும், சின்னதுரை கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்திற்கும், ரமேஷ் குமார் சிவகாசி டவுனுக்கும், கண்ணன், செல்வகுமார், சரோஜினி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தங்கேஸ்வரன் கூமாபட்டி போலீஸ் நிலையத்திற்கும், போலீசார் ஐயப்பன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கும், சுதா சிவகாசி டவுன் போலீசிற்கும், நாகேந்திரன் திருத்தங்கல் போலீஸ்நிலையத்திற்கும், ஈஸ்வரன் வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வத்திராயிருப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு பிரிவிற்கு சிவகாசி அனைத்து மகளிர் பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு ஞான ராணி, கூமாபட்டியில் பணியாற்றும் சுதா, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர்பிரிவில் பணியாற்றும் கனகவல்லி சேத்தூரில் பணியாற்றும் முத்துக்குமார், வத்திராயிருப்பில் பணியாற்றும் வினோத் கண்ணன், ராஜபாளையம் வடக்கில் பணியாற்றும் மாரி பூபதி, சிவகாசி கிழக்கில் பணியாற்றும் மரிய யாக்கோபு, நெப்போலியன்,எம்.புதுப்பட்டியில் பணியாற்றும் சங்கர், வன்னியம்பட்டியில் பணியாற்றும் ஜெயக்கொடி, ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றும் வைரமணி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனில் பணியாற்றும் முருகன், முத்துக்குமார், நரிக்குடியில் பணியாற்றும் ராஜா, சிவகாசி கிழக்கில் பணியாற்றும் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு பிரிவிற்கு பணியிட மாற்றம் பெற்றுள்ளனர்.


Next Story