காலரா நோய் பரவலை கட்டுப்படுத்த காரைக்காலில் 144 தடை உத்தரவு


காலரா நோய் பரவலை கட்டுப்படுத்த காரைக்காலில் 144 தடை உத்தரவு
x

காரைக்காலில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்கள் சிகிச்சை பெற்று திரும்பி வருகின்றனர். இதில் சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது.

காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நேய்களால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காரைக்காலில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.காலரா நோய் பரவலை கட்டுப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.அனைத்து உணவகங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்


Next Story