திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
பேராவூரணி ஒன்றியத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.
தஞ்சாவூர்
திருச்சிற்றம்பலம்:
தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களை, மக்கள் நல பணியாளர்கள் என்ற பெயரில் பணி நியமனம் வழங்க வேண்டும். கடந்த 32 ஆண்டு காலத்தை பணி காலமாக கருதி அதற்கான பண பலன்களை வழங்க வேண்டும், பணிக்காலங்களில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். தற்போது பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
Related Tags :
Next Story