வந்தவாசியில் சாலை பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
வந்தவாசியில் சாலை பணிகளை திட்ட இயக்குனர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தின் கீழ் செய்யூரில் இருந்து மேல்மருவத்தூர், வந்தவாசி, சேத்பட் வழியாக போளூர் வரை சுமார் 109 கிலோ மீட்டர் சாலையை ரூ.600 கோடியில் இருவழித்தட சாலையாக மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் 5 உயர்மட்ட பாலங்கள், ஒரு ெரயில்வே கீழ்பாலம், 12 சிறுபாலங்கள், 214 வாய்க்கால் பாலங்களும் மற்றும் வந்தவாசி, சேத்பட், மருதாடு பகுதிகளில் புதிய புறவழிச் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் பி.என்.ஸ்ரீதர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து சாலை அகலப்படுத்தப்பட்டுள்ள கீழ்சீசமங்கலம், ஆவணவாடி, நெடுங்குணம் பகுதிகளில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கே.லட்சுமிநாதன், உதவி கோட்டப் பொறியாளர் பாஸ்கரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.