முத்துப்பேட்டையில், புயல் பாதுகாப்பு கட்டிடங்களை திட்ட இயக்குனர் ஆய்வு


முத்துப்பேட்டையில், புயல் பாதுகாப்பு கட்டிடங்களை திட்ட இயக்குனர் ஆய்வு
x

முத்துப்பேட்டையில், புயல் பாதுகாப்பு கட்டிடங்களை திட்ட இயக்குனர் ஆய்வு

திருவாரூர்

முத்துப்பேட்டை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று திருவாரூர் திட்ட இயக்குனர் சந்திரா முத்துப்பேட்டை கடற்கரை பகுதியான இடும்பாவனம், கற்பகநாதர்குளம், கரையங்காடு ஆகிய பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டிடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழைக்காலத்தில் மக்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கட்டிடத்தில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கவும், ஜெனரேட்டர் மற்றும் மின் சாதனங்களை பழுது நீக்கவும் அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மாவட்ட செயற்பொறியாளர் சட்டையப்பன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அமுதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதியப்பன், செந்தமிழ் செல்வி தச்சுதானந்தம், அய்யம்மாள் மனோகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story