வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி கே.வி.குப்பம் ஊராட்சியில் உள்ள குறிஞ்சி நகரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுவரும் சிமெண்டு சாலைகள், ஆலங்கநேரி ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் நெற்களம், சோழமூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
முன்னதாக கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நலத்திட்ட பணி பதிவேடுகள், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், அனைத்து வீடுகள் கணக்கெடுப்பு, ஆவாஸ் பிளஸ் நிலுவைத் தொகை வீடுகள், வீடுகளின் மதிப்பீடு, 15-வது நிதிக்குழு மானியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டம், அவைசார்ந்த பதிவேடுகள் உள்ளிட்ட திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.