குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம்
பாபநாசம் பேரூராட்சியில் ரூ.14கோடியே 82 லட்சத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர்
பாபநாசம் பேரூராட்சியில் அம்ரூட் 2.0 திட்டத்தின் கீழ் 3741 வீடுகளுக்கு ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு தஞ்சை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கல்யாணசுந்தரம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் நாசர், தாமரைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் கோவி அய்யாராசு, துரைமுருகன் தமிழ்நாடு குடிநீர் மேம்பாட்டு கழகத்தின் திட்ட பொறியாளர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story