1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டம்-கின்னஸ் சாதனை குழுவினர் நேரில் ஆய்வு


1,400 பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்டம்-கின்னஸ் சாதனை குழுவினர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 2 Aug 2023 3:48 PM IST (Updated: 2 Aug 2023 6:33 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 நாள்களில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்ட பணிகளை கின்னஸ் சாதனை குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 நாட்களில் 1400 பண்ணை குட்டைகள் அமைக்கும் திட்ட பணிகளை கின்னஸ் சாதனை குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

சாதனை முயற்சி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாதனை முயற்சியாக ஜூலை 1-ந் தேதி முதல் 30 நாட்களில் 1,400 பண்ணை குட்டைகள் வெட்ட தீர்மானிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும் விவசாயத்தை வளமாக்கும் வகையிலும் நடைபெறும் இந்த பணிகளை திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பல்வேறு இடங்களில் பணிகளை துரிதப்படுத்தி நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில் வெட்டப்பட்ட பண்ணை குட்டைகளை உலக கின்னஸ் சாதனை மத்திய குழுவினர் சவுஜன்யா தலைமையில் நேரில் ஆய்வு செய்தனர்.

எக்லாஸ்புரம், அம்பலூர் ஊராட்சியில் வெட்டப்பட்ட பண்ணை குட்டைகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல்கலீல், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரதிசேட்டு, ஏ.பி.முருகேசன் பணிதள மேற்பார்வையாளர் விஜயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், பணியாளர்கள் உடனிருந்தனர்.

மரக்கன்று

முன்னதாக மத்திய குழுவின் தலைவர் சவுஜன்யா மரக்கன்று நட்டு வைத்தார்.

இதேபோல் ஆலங்காயம், மாதனூர், ஜோலார்பேட்டை ஒன்றியம் உள்ளிட்ட பகுதியில் வெட்டப்பட்டு வரும் பண்ணை குட்டை பணிகளையும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.


Next Story