எருமாம்பட்டி ஊராட்சியில்ரூ.1.18 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்மதியழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதியின் கீழ் எருமாம்பட்டி ஊராட்சி சவுளூர் கிராமத்தில் ரூ.22.80 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைக்கும் பணிகள் நடக்கிறது. மேலும் எருமாம்பட்டி குட்டூர் கிராமத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பில் தார்சாலை, கூரம்பட்டி தேனோமை நகர் அலங்கரிபள்ளம் கிராமத்திற்கு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கப்படுகிறது. மொத்தம் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் விமலா பெரியசாமி, மாதவி முருகேசன், துணை தலைவர் அன்னகொடி அன்பரசு, கவுன்சிலர்கள் குமரவேல், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், நிர்வாகிகள் தசரா, தம்பிதுரை, முருகன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல காவேரிப்பட்டணம் ஒன்றியம் எர்ரஅள்ளி ஊராட்சி ஹவுசிங் போர்டில் பல்நோக்கு மைய கட்டிடம் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.