நெமிலி ஒன்றியத்தில் ரூ.18 லட்சத்தில் திட்டப்பணிகள்
நெமிலி ஒன்றியத்தில் ரூ.18 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு ஒன்றிய குழு தலைவர் அடிக்கல் நாட்டினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை
நெமிலி ஒன்றியத்தில் ரூ.18 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு ஒன்றிய குழு தலைவர் அடிக்கல் நாட்டினார்.
நெமிலி ஒன்றிய பொது நிதி மற்றும் 15-வது நிதி குழு மானியத்திலிருந்து, கடம்பநல்லூர் கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் பின்னாவரம் ஆதி திராவிடர் காலனியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை என மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா நடந்தது. நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு தலைமை தாங்கி, திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வரலட்சுமி அஷோக்குமார், விநாயகம், ஒப்பந்ததாரர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story