அரசு வாகன டிரைவர்களுக்கு பதவி உயர்வு:கலெக்டரிடம் கோரிக்கை
அரசு வாகன டிரைவர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தேனி
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் அஜீம்பாட்ஷா, மாவட்ட செயலாளர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் நேற்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "தமிழ்நாடு அரசு துறைகளில் பணியாற்றும் வாகன டிரைவர்களுக்கு கடந்த 31.5.2009 அன்றுக்கு பிறகு, 10 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு வழங்க வேண்டிய தர ஊதியம் 13 ஆண்டுகளை கடந்தும் வழங்கப்படவில்லை. இதனால், டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை போக்குவதற்கு 10 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து டிரைவர்களுக்கும் கிடைக்க வேண்டிய படிப்புக்கு ஏற்ற பதவி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story