பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை
பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆலங்குளம்,
வெம்பக்கோட்டை தாலுகா அளவிலான மக்கள் தொடர்பு திட்ட முகாம் கீழாண்மறைநாடு கிராமத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கு பொதுமக்களிடமிருந்து முன்னோடி மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கீழாண்மறைநாடு கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னோடி மனுக்களை தாசில்தார் ரெங்கநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராமசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கீழாண்மறைநாடு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அப்போது தாசில்தார் கூறுகையில், இந்த நிகழ்ச்சியில் ெமாத்தம் 56 பேர் மனு அளித்துள்ளனர். இந்த மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று முன்னோடி மனுக்கள் வாங்கப்படும் என்றார். இதில் ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் அறிவழகன், கீழாண்மறைநாடு கிராம நிர்வாக அதிகாரி பொற்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.