போலீசாரின் சிறப்பு முகாமில் 2 மனுக்களுக்கு உடனடி தீர்வு
போலீசாரின் சிறப்பு முகாமில் 2 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜாசோமசுந்தரம், வெங்கடேசன், சங்கர் கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 25 மனுக்களில், 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது தீர்வு காண மேல் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story