மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெற சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்
மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை பெற சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு, தொழு நோய், முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2,000 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு உதவித் தொகையினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் தொடர்ந்து பெற வேண்டுமாயின் மாற்றுத் திறனாளிகள், தங்களது மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் -2, மனவளர்ச்சி குன்றியோராக இருந்தால் மாற்றுத்திறனாளி மற்றும் தந்தை அல்லது தாயுடன் இணைந்த புகைப்படம் - 2, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பின் அதன் நகல் ஆகியவற்றினை, வருகிற 24-ந் தேதிக்குள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக பி பிளாக்கில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.