இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பிரசார இயக்கம்


இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பிரசார இயக்கம்
x

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பிரசார இயக்கம் நடந்தது.

திருவண்ணாமலை

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பெருமாள்சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மகேந்திரன், முருகன், அயூப்கான், ஜெயகுமார், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story