சொத்து பட்டியல் விவகாரம்:'நானும் வழக்கு தொடருவேன்' -மதுரையில் கனிமொழி பேட்டி
சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக ‘நானும் வழக்கு தொடருவேன்’ என்று மதுரையில் கனிமொழி பேட்டி அளித்தார்
மதுரை
மதுரை விமான நிலையத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சொத்து பட்டியல் விவகாரம் குறித்து, தி.மு.க. ஏற்கனவே அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நிச்சயமாக நானும் வழக்கு தொடருவேன். அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். ஸ்டெர்லைட் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தொடர்ந்து தி.மு.க. அரசு ஸ்டெர்லைட்டை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடி வருகிறது. மக்களுடைய குரலை எதிரொலிக்கிறது, நிச்சயமாக நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story