நெல்லை மாநகரில் 'நம்பர் பிளேட்' இல்லாதவாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு


நெல்லை மாநகரில் நம்பர் பிளேட் இல்லாதவாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு
x

நெல்லை மாநகரில் ‘நம்பர் பிளேட்’ இல்லாத வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை:

நெல்லை மாநகர பகுதிகளில் மோட்டார் வாகன சட்டத்தை மீறி வாகனங்களை இயக்குவோர் மீது போக்குவரத்து போலீசார் அபராதம், கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 'நம்பர் பிளேட் இல்லாமல்' சட்டவிரோதமாக வாகனங்கள் இயக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து அந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், மேற்கு துணை கமிஷனர் சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் நேற்று முன்தினமும், நேற்றும் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை மற்றும் மாநகரத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட 77 மோட்டார் சைக்கிள்கள், வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத வானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story