திருவட்டார் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; 2 இளம்பெண்கள் மீட்பு

திருவட்டார் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்;  2 இளம்பெண்கள் மீட்பு
x
தினத்தந்தி 20 Jun 2023 12:15 AM IST (Updated: 20 Jun 2023 3:43 PM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

வீட்டில் சோதனை

திருவட்டார் அருகே முளகுமூடு நிங்காரவிளையில் உள்ள ஒரு வீட்டில் இரவு, பகல் நேரத்தில் வெளியூரை சேர்ந்த ஆண்கள் வந்து செல்வதாக போலீசாரிடம் புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மதியம் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அந்த வீட்டில் திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது அரைகுறை ஆடையில் 2 இளம்பெண்களும், ஒரு ஆணும் இருந்தனர். உடனே போலீசார் 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விபசாரம்

இதில் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த ரவீந்திரன் (வயது 61) என்பவர் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இவர் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர். மேலும் இவர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசார தொழிலுக்கு பயன்படுத்தியதும் அம்பலமானது. இதற்காக நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த 33 வயது இளம்பெண், சென்னையை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்தனர்.

Next Story