வெளிமாநில அழகிகளை வேலைக்கு சேர்த்து மசாஜ் சென்டரில் விபசாரம்


வெளிமாநில அழகிகளை வேலைக்கு சேர்த்து மசாஜ் சென்டரில் விபசாரம்
x

திருச்சியில் மசாஜ் சென்டரில் வெளிமாநில அழகிகளை வேலைக்கு சேர்த்து விபசாரம் நடத்தியதாக அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியை சேர்ந்த 2 அழகிகள் மீட்கப்பட்டனர்.

திருச்சி

திருச்சியில் மசாஜ் சென்டரில் வெளிமாநில அழகிகளை வேலைக்கு சேர்த்து விபசாரம் நடத்தியதாக அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரியை சேர்ந்த 2 அழகிகள் மீட்கப்பட்டனர்.

விபசாரம்

திருச்சி தில்லைநகர் சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள ஏ.எஸ்.ஆர். கம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகத்தின் மாடியில் `ஸ்ரீசாய் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இதை திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ். காலனி 2-வது வீதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பூபதிசஞ்சய் (வயது 28) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.

இந்த மசாஜ் சென்டரில் கடந்த சில ஆண்டுகளாக விபசாரம் நடப்பதாக அப்பகுதியில் குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்தநிலையில் திருச்சி கீழப்புலிவார்டு சாலையை சேர்ந்த சபீக்முகமது அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரை அணுகிய பூபதிசஞ்சய், எனது மசாஜ் சென்டரில் புதுச்சேரியை சேர்ந்த 2 அழகிகள் இருப்பதாவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறி சபீக்முகமதுவை அழைத்துள்ளார்.

உரிமையாளர் கைது

அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், இதுபற்றி திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த மசாஜ் சென்டரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு புதுச்சேரியை சேர்ந்த 2 இளம் பெண்களை வைத்து ஆண்களுக்கு மசாஜ் செய்வது போல் விபசாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதிசஞ்சய்யை கைது செய்தனர். பின்னர் அவர், திருச்சி 4-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 2 இளம் பெண்களும் திருச்சி காஜாமலையில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


Next Story