திண்டிவனத்தில்வாடகை வீட்டில் விபசாரம்; பெண் கைது


திண்டிவனத்தில்வாடகை வீட்டில் விபசாரம்; பெண் கைது
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் தலைமையிலான போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது திண்டிவனம் பாரதிதாசன்பேட்டையை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், வீட்டை வாடகைக்கு எடுத்து 2 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் வீடு எடுத்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 41 வயது பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story