விஷம் குடித்து புரோட்டா மாஸ்டர் தற்கொலை
விஷம் குடித்து புரோட்டா மாஸ்டர் தற்கொலை
அரியலூர் மாவட்டம் பெரிய பட்டாக்காடு கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கபிலன்(வயது 21). இவர், கடந்த 6 ஆண்டுகளாக திருக்காட்டுப்பள்ளியில் தங்கி இருந்து ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் தனது சம்பள பணத்தை வீட்டிற்கு அனுப்புவதில்லை. இதனால் அவரது தந்தை செல்போனில் சம்பள பணத்தை அனுப்பாமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த கபிலன் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம். பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.