மோட்டார் சைக்கிள் மோதி புரோட்டா மாஸ்டர் சாவு
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி புரோட்டா மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மோதி புரோட்டா மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்தவர் மைதீன் (வயது 59), புரோட்டா மாஸ்டர். இவர் கடந்த 11-ந் தேதி கோட்டார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மைதீன் மீது மோதியது. இதில் மைதீன் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மைதீன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மைதீன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.