விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 July 2023 2:30 AM IST (Updated: 24 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

விலைவாசி உயர்வை கண்டித்து தேனியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி

தமிழக அரசு அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி மாவட்டத்தில் அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனியில் கருவேல்நாயக்கன்பட்டி, பழைய பஸ் நிலையம், அல்லிநகரம் ஆகிய இடங்களில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட வர்த்தகர் பிரிவு தலைவர் ஜெயராம், நகர பொதுச்செயலாளர் ஜெயமுருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story