தேனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தேனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 July 2023 2:30 AM IST (Updated: 24 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதை கண்டித்து தேனி பழைய பஸ் நிலையம் அருகில் தேனி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக் தலைமை தாங்கினார்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு கிறிஸ்தவ நல பேரமைப்பு தலைவர் நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


Related Tags :
Next Story