கம்பத்தில் பார்வர்டு பிளாக் கட்சியினர் உண்ணாவிரதம்
கம்பத்தில் பார்வர்டு பிளாக் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கம்பம் அரசு மருத்துவனையை தலைமை மருத்துவமனையாக மாற்ற வேண்டும். மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதியை கொண்டு வர வேண்டும். கூடுதல் டாக்டர்களை நியமனம் செய்ய வேண்டும். இருதய சிறப்பு டாக்டர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். பிரேத பரிசோதனை கூடத்தை நவீன குளிர்சாதன வசதியுடைய கூடமாக மாற்ற வேண்டும். மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் கம்பம் நகர செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story