காங்கிரஸ் கட்சியினா் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினா் ஆர்ப்பாட்டம்
x

மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

மன்னார்குடி;

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு மத்திய பா.ஜனதா அரசு செயல்படுவதாக கூறி இதை கண்டித்து மன்னார்குடியில் காங்கிரஸ் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி துரைவேலன் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஆர்.கனகவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுசெயலாளர் வீரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், வட்டார தலைவர் செல்வராஜ், கூத்தாநல்லூர் நகர்மன்ற உறுப்பினர் சமீர், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நெடுவை குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.


Next Story