நாமக்கல்லில் போக்குவரத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்   போக்குவரத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் போக்குவரத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சேலம் மண்டல அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் நல சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தாமோதரன், பொருளாளர் சுந்தர பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதியில் பணியில் சேர்ந்த அனைவரையும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். போக்குவரத்து துறை ஓய்வூதியர்களை மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்த்து மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் 1-ந் தேதி ஓய்வூதியத்தை அரசே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் அனைத்து மண்டலங்களிலும் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி குறைகளை கேட்க வேண்டும் என்றும், போக்குவரத்து கழகங்களில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு, ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்களை வழங்க வேண்டும் என போக்குவரத்துத்துறை ஓய்வூதியர்கள் வலியுறுத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஆறுமுகம், சீனிவாசன், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story