காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்


நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பாக ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணைக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயிலடியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், மாநில துணைத்தலைவர் ராஜா தம்பி, மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், முன்னாள் மாநில துணைத்தலைவர் கலைச்செல்வன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மகேந்திரன், குணா பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.என்.டி.யூ.சி பொதுச்செயலாளர் மோகன்ராஜ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு கண்டம் தெரிவித்ததோடு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமநாத துளசியய்யா வாண்டையார், கண்டிதம்பட்டு கோவிந்தராஜூ, மாவட்ட ஊடகப்பிரிவுத்தலைவர் பிரபு, வட்டாரத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர்கள் பட்டுக்கோட்டை ராமசாமி, கறம்பயம் சக்திவேல், செந்தில் நா.பழனிவேல், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சதா.வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story