தேனியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தேனியில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, நாடு முழுவதும் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஆகியவற்றை திரும்பபெற வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தே.மு.தி.க.வினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுவை கலெக்டர் முரளிதரனிடம் கொடுத்தனர்.
Related Tags :
Next Story