நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில்  பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்

விருப்ப ஓய்வு திட்டம் மூலம் 35 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை அரசும், பி.எஸ்.என்.எல். நிர்வாகமும் எடுத்து வருவதாகவும், இதை கண்டித்தும் நேற்று பி.எஸ்.என்.எல். பணியாளர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். இதில் தபால்துறை சங்கத்தின் நிர்வாகி நாகரத்தினம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பணி நீக்கம் செய்வேன் என்று மிரட்டுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story