ஆயக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பழனியை அடுத்த ஆயக்குடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பழனியை அடுத்த ஆயக்குடி சந்தைப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, ஆயக்குடி பொன்னிமலை கரடு, கோம்பைபட்டி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளால் சேதமான பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story