வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்
மன்னார்குடியில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மன்னார்குடி;
மன்னார்குடி நகரம் 2-வது வார்டு அம்பலகார தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 29 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 14 -ந் தேதி உதவி கலெக்டர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன்படி இந்த மாதம் 13-ந் தேதிக்குள் பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை பட்டா வழங்காததால் அம்பலக்கார தெருவில் வசிக்கும் 29 குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் உதவி கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தாயுமானவன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், விவசாய சங்க மாவட்ட தலைவர் தம்புசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் ஜெகதீசன், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.