நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

நாமக்கல்லில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

நாமக்கல்:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு மற்றும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். கலா வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாரியப்பபிள்ளை, கலைச்செல்வன், பாலகிருஷ்ணன், செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story