சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் சமயபுரம் சுங்கச்சாவடி முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம்-தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவிப்பு


சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் சமயபுரம் சுங்கச்சாவடி முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம்-தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவிப்பு
x

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால், சமயபுரம் சுங்கச்சாவடி முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பை அறிவித்து உள்ளது.

நாமக்கல்

நாமக்கல்:

சுங்க கட்டணம் உயர்வு

தமிழகம் முழுவதும் நேற்று முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் செல்ல.ராசாமணி நாமக்கல்லில் நேற்று கூறியதாவது:-

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 46 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 20 சுங்கச்சாவடிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 5 சதவீத கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட திட்ட நிதி முழுமையாக வசூல் செய்யப்பட்ட பிறகு சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் 15 ஆண்டுகளில் சுங்கசாவடியை அகற்ற வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறையாகும். நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் பல சுங்கச்சாவடிகள் காலாவதியாகியும் அகற்றப்படாமல் உள்ளன.

ஆர்ப்பாட்டம்

இதுவரை மத்திய அரசு சுங்கச்சாவடிகள் மூலம் அதிக வருவாயை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 30 சதவீதம் வாகன விற்பனை அதிகரித்து உள்ளது. வாகன விற்பனை அதிகமாக இருக்கும் போது, சுங்ககட்டணத்தை மத்திய அரசு குறைப்பதற்கு மாறாக, உயர்த்தி உள்ளது.

இதனால் வாகன ஓட்டுனர்கள், லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே மத்திய அரசு உயர்த்திய சுங்கக்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு சார்பில் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story