கிருஷ்ணகிரியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி எல்.ஐ.சி. அலுவலகம் எதிரில், அகில இந்திய முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை சங்க தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். செயலாளர் முருகானந்தம், பொருளாளர் சக்திவேல், ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முகவர்கள் அஸ்மத்துல்லா, சிவதாஸ், வசந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாலிசிதாரர்கள் போனசை உயர்த்தி கொடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். குழு காப்பீட்டை உயர்த்தி கொடுக்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீட்டை வழங்க வேண்டும். நேரடி முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கு வட்டி, முகவர்களின் வீட்டு கடன் வட்டியை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.