கூலிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவில் முன்பு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
கூலிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவில் முன்பு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
நாமக்கல்
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் அருகே உள்ள கூலிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவில் முன்பு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தக்கோரி திடீர் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு சேந்தமங்கலம் தொகுதி பொறுப்பாளர் சஞ்சய் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் நாடாளுமன்ற பொறுப்பாளர் டாக்டர் பாஸ்கர், மாவட்ட செயலாளர் அரிகரன், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கோவிலுக்கு சென்ற அவர்கள் அர்ச்சகரிடம் தமிழில் மந்திரம் முழங்கி அர்ச்சனை செய்ய கோரிக்கை விடுத்தனர், பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story