மின்கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மின்கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து, நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து, நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயசுந்தர் தலைமை தாங்கினார். மாநில வக்கீல் பாசறை பொருளாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்.

இதில் மாவட்ட செயலாளர் சின்னமாயன், பொருளாளர் மரியகுணசேகர் உள்பட தொகுதி, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மின்கட்டண உயர்வை கண்டித்தும், மின்கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் கட்சியினர் கோஷமிட்டனர்.


Related Tags :
Next Story