தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2022 12:15 AM IST (Updated: 21 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பழனியம்மாள், போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு மாநில இணை செயலாளர் குப்புசாமி, மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கரன், கோபாலன் ஆகியோர் பேசினர். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டண சலுகை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட சந்தா தொகையை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் மாவட்ட பொருளாளர் கேசவன் நன்றி கூறினார்.


Next Story