ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மன்ற கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிப்பு
தர்மபுரி
நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாதாந்திர வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த வார்டு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கி, கூட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். அப்போது ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் புதிய தெரு விளக்குகள் அமைத்து தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று வார்டு உறுப்பினர்கள் 6 பேர் தெரிவித்தனர். மேலும் அவர்கள் மன்ற கூட்டத்தை புறக்கணித்து, துணைத்தலைவர் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
Next Story