கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி முகவர் சங்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு, அகில இந்திய முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகானந்தம், பொருளாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொருளாளர் ரமேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதிமூலம் வரவேற்றார். துணைத் தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பாலிசிதாரர்களுக்காக, பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும். சிட்டிசன் சார்ட் படி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து சேவைகளும் வழங்கப்பட வேண்டும். பாலிசிதாரர்களின் கருத்துக்களை ஏற்று கொள்ள வேண்டும். பலமுறை கே.ஒய்.சி.க்காக ஆவணங்கள் கேட்பதை தவிர்க்க வேண்டும்.

பணிக்கொடை

ஒரே இடத்தில் பாலிசி அச்சடிப்பது மற்றும் அனுப்புவதை நிறுத்தி, பழைய முறையையே பின்பற்ற வேண்டும். பாலிசியின் சேவை மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். முகவர்களுக்காக, பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவக்குழு காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். குழு காப்பீடு வயது மற்றும் தொகையை உயர்த்த வேண்டும்.

முகவாண்மைக்குழு காப்பீடு உயர்த்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story